search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெங்கநாதர் கோவில்"

    • தேரோட்டம் 19-ந்தேதி நடைபெறுகிறது.
    • 20-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். நேற்று காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் வீதி உலா வந்தார்.

    விழாவின் 4-ம் நாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை 3.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு காலை 3.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து காலை 4.30 மணிக்கு நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 6 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைவார். மண்டபத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நண்பகல் 12 மணிக்கு திருச்சி ஆரியவைஸ்யாள் ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார்.

    அங்கிருந்து மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைவார். அங்கிருந்து இரவு 9 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    நாளை (சனிக்கிழமை) காலை சேஷ வாகனத்திலும், மாலையில் அனுமந்த வாகனத்திலும், 16-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 17-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 18-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 20-ந் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் 19-ந்தேதி நடைபெறுகிறது.
    • 20-ந் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வருகிற 21-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் காலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பேரிதாடனம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    விழாவின் இரண்டாம் நாளான இன்று மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும், நாளை(வியாழக்கிழமை) காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 14-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 15-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 16-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 17-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார்.

    18-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 20-ந் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • 17-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார்.
    • தேரோட்டம் 19-ந்தேதி நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தக்காலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கலபொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதன் பின்னர் காலை 10.15 மணியளவில் மிதுன லக்னத்தில் முகூர்த்தக்காலை தேரில் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின. இந்நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வருகிறார். காலை 6.30 மணிமுதல் 7 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர் கொடிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு காலை 7.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 12-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். அன்று மாலை கற்பகவிருட்ச வாகனத்தில் உலா வருகிறார்.

    13-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 14-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 15-ந்தேதி காலை சேஷவாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 16-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

    17-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 18-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 20-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    • சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நம்பெருமாள் தங்க கருட வாகனம், சேஷவாகனம், கற்பக விருட்சம், தங்க குதிரை வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 5-ந் தேதி விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. 6-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு கருடமண்டபத்திற்கு மாலை 3.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு வாகன மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு சென்றார்.

    வாகன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்பட கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்.
    • இன்று ஆளும் பல்லக்கு உலாவும் நடந்து பங்குனித்திருவிழா நிறைவுபெறும்.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மண்டகப்படிகளுக்கு சென்று வந்தார். உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான நம்பெருமாள்-ரெங்கநாயகி தாயார் சேர்த்தி சேவை நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று காலை வரை நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேர் எனப்படும் கோ ரத புறப்பாடு நேற்று நடந்தது. இதற்கென தாயார் சன்னதி சேர்த்தி உற்சவத்தில் இருந்தபடி உற்சவர் நம்பெருமாள் நேற்று காலை 9 மணியளவில் பச்சை சாதரா பட்டுடுத்தி, முத்துவளையக் கொண்டை, கஸ்தூரி திலகம், கவுஸ்துபம் எனப்படும் நீலமணிநாயகம், ரத்தின அபயஹஸ்தம் உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து தேருக்கு புறப்பட்டார். அங்கிருந்து சித்திரை வீதி வடகிழக்கு மூலையில் நின்றிருந்த கோ ரதத்தில் காலை 10 மணியளவில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து காலை 10.45 மணியளவில் உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில் கோ ரதம் வடம் பிடிக்கப்பட்டது.

    அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், கஸ்தூரி ரங்கா... காவேரி ரங்கா... என பக்தி பரவசத்துடன் முழங்கியவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனர். கீழச்சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேலச்சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகள் வழியாக தேர் ஆடி அசைந்து வந்து மதியம் 3.15 மணியளவில் மீண்டும் நிலையை அடைந்தது.

    தேரோட்டத்தை முன்னிட்டு மாநகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலையில் தேரில் இருந்து பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளினார். இரவில் சப்தாவரணமும், இன்று(வெள்ளிக்கிழமை) 7-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உலாவும் நடந்து பங்குனித்திருவிழா நிறைவுபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.
    • ஸ்ரீரங்கம் கோயிலில், பங்குனி உத்திர மண்டபம் என்றே உள்ளது.

    பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊடல் என்பதை ஏதோ கணவன்-மனைவி சண்டையாகப் பார்க்கக்கூடாது. அது, ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடைபெறுகிற பாசப் போராட்டம் என்பார்கள். அதாவது, ஜீவாத்மாவான மனைவியும், பரமாத்மாவான கணவனும் தங்களுக்குள் நிகழ்கிற ஊடல்களைப் பெரிதுபடுத்தாமல், அனைத்தையும் மறந்து, அனுசரித்து இணைந்து வாழ்ந்தால்தான் பேரின்பத்தை அடைய முடியும் என்னும் தத்துவத்தை விளக்குகிறது இது.

    இந்த கருத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில், பங்குனி உத்திர நாளில் ஸ்ரீரங்கத்தில் மட்டையடி உத்சவம் நடைபெறுகிறது. சரி... பெருமாளுக்கும் தாயாருக்கும் என்ன பிரச்சினை? ஏன் ஊடல்? அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    திருச்சியில் உள்ள உறையூரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்தான் சோழ மன்னன் ஒருவன். அவனுக் குக்குழந்தை பாக்கியம் இல்லை. அந்தக் குறையைப் போக்க, ஸ்ரீமகாலட்சுமி தாமரை மலரில் அவதரித்தாள். அவளை ரங்கநாதன் திருமணம் செய்தார். இதனால் உறையூரில், கமலவல்லி நாச்சியாருக்கு கோயிலே அமைந்துள்ளது. தாயாரின் திருநட்சத்திரம்-ஆயில்யம். எனவே, பங்குனியின் ஆயில்ய நட்சத்திர நன்னாளில், ஸ்ரீரங்கநாதர் உறையூருக்கு வருவார். அவருடன் கமலவல்லி நாச்சியார், சிம்மாசனத்தில் திருக் காட்சி தருவார்.

    உறையூரில் நாச்சியாருடன் வீதியுலா வந்து விட்டு, பின்பு ஸ்ரீரங்கம் ஆலயத்துக்கு வருவார் அரங்கன். 'பெருமாளைக் காணோமே...' என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் ஸ்ரீரங்கநாயகித் தாயார், இவரின் வருகையைப் பார்க்காமல் விடுவாளா? எங்கு சென்று விட்டு வருகிறார் என்பதை அறிந்து, கோபம் தலைக்கேறியபடி, புளித்த தயிர், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அள்ளி யெடுத்துப் பெருமாளின் மீது வீசியெறிந்தாள்.

    பெருமாள் தன்னைப் பார்க்க வரக் கூடாதென தடை செய்வார் பிராட்டியார் ஸ்ரீரங்கநாதர் சோழ நங்கைக்காக உறையூர் சென்று ஒரு நாள் தங்கியிருந்த விவரத்தை தாயார் அறிந்த கோபம்தான் தடை செய்ததன் காரணம்.

    அதன் பிறகு நிகழ்கிற அவர்களின் உரையாடல்கள்தான், சுவாரஸ்யம்! உமது ஆடைகள் கசங்கியிருக்கின்றன, உங் களின் நகைகள் கலைந்து கிடக்கின்றன. உடலெங்கும் இப்படி வியர்த்துக் கொட்டுகிறதே! என்று ரங்கநாதரை அணு அணுவாக அளந்து, ஆராய்ந்து, கோபக் கணைகளை கேள்விக் கணைகளாக்கி தொடுப்பாள் தாயார். "என்ன... என்னையே, சந்தேகப்படுகிறாயா? உனக்காக, கடலில் மூழ்கி விடட்டுமா? எரிகின்ற தீயில் குதித்து விடட்டுமா? அல்லது, பாம்புக் குடத்தில் கையை விடட்டுமா?" என, தன் மனைவியைச் சமாதானப்படுத்தும் நோக்கில் ஏதேதோ சொன் னார் ஸ்ரீஅரங்கன்.

    இந்த பிணக்கை நம்மாழ்வார் தீர்த்து வைத்தார்.

    பெருமாள் தன் தவறை பிரதான பிராட்டியிடம் ஒப்புக் கொள்ள நாச்சியார் பெருமாளை ஏற்றுக் கொண்டார். பிறகு பெருமாளும் தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி என்னும் சேவை சாதிப்பர். இது ஆலய 5-வது திருச்சுற்றில் பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும். இவ்விழாவை காண்பவர்களுக்கும் திருமணப் பேறு உண்டாகும்.

    பங்குனி உத்திரப் பெருவிழாவன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தைக் கண்குளிரத் தரிசித்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் என்பது ஐதீகம்! இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதி, மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு, கருத்தொற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    ஸ்ரீரங்கம் கோயிலில், பங்குனி உத்திர மண்டபம் என்றே உள்ளது. இந்த நாளில், பெருமாளும் தாயாரும் திருக்காட்சி தருவது இந்த மண்டபத்தில்தான்.

    • இன்று இரவு சப்தாவரணம் நடக்கிறது.
    • நாளை ஆளும் பல்லக்கு வீதி உலாவுடன் பங்குனித்திருவிழா நிறைவடைகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் பங்குனி தேர்த் திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தங்க கருடவாகனம், சேஷவாகனம், கற்பக விருட்ச வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருவிழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். 8-ம் நாளன்று நம்பெருமாள் தங்ககுதிரை வாகனத்தில் வையாளி கண்டருளுளினார். விழாவின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள்-ரெங்கநாயகி தாயார் சேர்த்தி சேவை நடைபெற் றது.

    ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தினத்தன்று இந் நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும் தாயாரும் ஒருசேர இருப்பார்கள். இந்த காட்சியை சேர்த்தி சேவை என்று அழைப்பர். பெருமாளையும் தாயாரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம். இந்த சேர்த்தி சேவையை தரிசிக்க ஆயிரக்கணக்கான தம்பதிகள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தருவர்.

    இந்நிகழ்ச்சியையொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல் லக்கில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வார் திருச்சுற்று வழியே காலை 9.30 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டருளி பகல் 12 மணிக்கு முன்மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பகல் 1.30 மணிக்கு புறப் பட்டு பங்குனி உத்திரமண்டபத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்ந்தார்.

    மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் பகல் 2 மணிக்கு புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை பகல் 2.15 மணிக்கு வந்தடைந்தார். பகல் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை சர்வ அலங்காரத்துடன் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. பின் னர் சின்னப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி இரவு 10.30 மணிக்கு தாயார் சன்னதியை சென்றடைந்தார்.

    இரவு 12 மணி முதல் இன்று (6-ந்தேதி) அதிகாலை 3.30 மணிவரை திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து தாயார் புறப்பட்டு காலை 5.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளியிருந்த பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையை திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து இரவு முழுவதும் தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் இன்று (6-ந்தேதி, வியாழக்கிழமை) நடைபெற்றது. இன்று இரவு சப்தாவரணமும், நாளை (7-ந்தேதி) இரவு ஆளும் பல்லக்கு வீதி உலாவுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் செ.மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துள்ளனர்.

    • தேரோட்டம் 6-ந் தேதி நடைபெறுகிறது.
    • 7-ந்தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் வெவ்வேறு வாகனங்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாவின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்திலிருந்து திருச்சிவிகையில் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள திருகொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் ஆழ்வான் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதிக்கு இரவு 8.30 மணிக்கு வந்து சேர்ந்தார். இரவு 11.30 மணியளவில் தாயார் சன்னதியில் திருமஞ்சனம் கண்டருளி நள்ளிரவு 12.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார்.

    திருவிழாவின் 8-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி எல்லைக்கரை ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 11 மணிக்கு சென்றடைகிறார். அங்கிருந்து நம்பெருமாள் குதிரை வாகனத்தில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து கோரதம் அருகே வையாளி கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.45 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார்.

    9-ம் நாளான நாளை (புதன்கிழமை) நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும் தாயாரும் ஒருசேர இருப்பார்கள். ஒருசேர இருக்கும் காட்சியை சேர்த்தி சேவை என்று அழைப்பர். தாயாரையும், பெருமாளையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.

    இந்த சேர்த்தி சேவையை தரிசிக்க லட்சக்கணக்கான தம்பதிகள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தருவர். ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று இந்நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக காலை 9.30 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைகிறார்.

    பின்னர் சமாதானம் கண்டருளி பகல் 12 மணிக்கு முன்மண்டபம் வந்து சேருகிறார். 12.30 மணியிலிருந்து 1.15 மணிவரை முதல் ஏகாந்தம் நடைபெறுகிறது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேருகிறார். மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் பகல் 2 மணிக்கு புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை பகல் 2.15 மணிக்கு வந்தடைகிறார். பகல் 3 மணிமுதல் இரவு 10.30 மணி வரை நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு கோரதத்துக்கு (தேருக்கு) வருகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 7-ந்தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • 5-ந்தேதி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள்-ரெங்நாச்சியார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.
    • தேரோட்டம் 6-ந் தேதி நடைபெறுகிறது.

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனிதேர்த்திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். விழாவின் 2-ம் நாளான கடந்த 29-ந்தேதி இரவு நம்பெருமாள்

    பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் 4-ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.

    இதையொட்டி காலை 8 மணி அளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து காலை 9.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணியளவில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணியளவில் வாகன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    5-ம் நாளான இன்று (சனிக்கிழமை) நம்பெருமாள் காலை சேஷவாகனத்திலும், மாலை கற்பவிருட்ச வாகனத்திலும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) நம்பெருமாள் வழிநடை உபயங்கள் கண்டருளி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மகாஜன மண்டபத்தில் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளுகிறார்.

    விழாவின் 9-ம் நாளான 5-ந்தேதி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள்-ரெங்நாச்சியார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் (கோரதம்) வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. 7-ந்தேதி ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • அபிஷேகத்திற்கு பின்னர் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்
    • நம்பெருமாளுக்கு தயிர் சாதம், மாவடு, கீரை வைத்து அமுது படைத்தனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இதைெயாட்டி நேற்று முன்தினம் இரவு நம்பெருமாள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி காவிரி ஆற்றின் வழியாக சென்று நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜீயபுரத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நேற்று காலை நம்பெருமாளுக்கு தயிர் சாதம், மாவடு, கீரை வைத்து அமுது படைத்தனர்.

    இதைத்தொடர்ந்து நம்பெருமாள் அந்தநல்லூர், அம்மன்குடி, திருச்செந்துறை போன்ற பகுதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின்னர் ஆஸ்தான மண்டபம் எதிரில் உள்ள தீர்த்தவாரி குளத்தில் ஜடாரி தீர்த்தவாரி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மதியம் மீண்டும் ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு அபிஷேகத்திற்கு பின்னர் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    இதில் ஜீயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் மாலை நேரத்தில் மீண்டும் பல்லக்கில் புறப்பாடாகி ஜீயபுரம் காவிரி ஆற்றின் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலை அடைந்த நம்பெருமாள், கண்ணாடி அறையில் எழுந்தருளினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    முன்னொரு காலத்தில் ரெங்கநாதர் மீது அளவு கடந்த பக்தி கொண்ட ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பேரன் ரங்கன், முகத்திருத்தம் செய்து கொண்டு காவிரி ஆற்றில் குளித்தபோது வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டான். இதையடுத்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே கரை ஒதுங்கி உயிர் பிழைத்த ரங்கன், தன்னை காணாது பாட்டி அழுவாள் என்று ரெங்கநாதரிடம் முறையிட்டான்.

    காவிரியில் வெள்ளம் கண்டு அழுது புலம்பிய பாட்டியை ஆறுதல்படுத்த, ஜீயபுரத்து காவிரி கரை அருகே குளித்து எழுந்த நிலையில் ரங்கன் உருவில் நம்பெருமாள் வந்தார்.இதனால் மகிழ்ந்த மூதாட்டி, பேரனை வீட்டிற்கு அழைத்து சென்று பழைய சோறும், மாவடுவும் அளித்தாள். அதனை ரெங்கநாத பெருமாள் சாப்பிட்ட வேளையில், அங்கு ரங்கன் வர, நம்பெருமாள் சிரித்தபடியே மறைந்தார். இதனை நினைவூட்டும் வகையில் நேற்று ஜீயபுரத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாளுக்கு தயிர் சாதமும், மாவடுவும், கீரையும் அமுது படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இன்று காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தான மண்டபம் சென்றடைவார்.
    • பங்குனிதேர்த்திருவிழா 7-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனிதேர்த்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 7-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    விழாவின் 2-ம் நாளான நேற்று நம்பொருமாள் கண்ணாடி அறையிலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள கருடமண்டபத்திற்கு காலை 9.30 மணிக்கு வந்தார். அங்கிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு கண்ணாடி அறைக்கு மாலை 5.30 மணிக்கு சென்றடைந்தார். பின்னர் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து இரவு 9 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு மேலூரில் வழிநடை உபயங்கள் கண்டருளி காவிரியாறு வழியாக இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தான மண்டபம் சென்றடைவார். அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி இரவு 10.30 மணிக்கு கண்ணாடி அறையை வந்தடைகிறார்.

    ஜீயபுரத்தில் ரெங்கநாதரை சர்வ காலமும் நினைத்து வாழும் ஒரு மூதாட்டி இருந்து வந்தாள். இளமையிலேயே கணவனை இழந்த அவளுக்கு இரண்டே உறவுகள் தான். ஒருவர் ரெங்கநாத பெருமாள், மற்றொருவர் அவளின் பேரன் ரங்கன். ஏழ்மையிலும் இறைவனை மறக்காத அந்த பாட்டி, சதா சர்வகாலமும் ரெங்கா என்றே வாழ்ந்து வந்தார். ரெங்கநாதர் மீது அவர் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார்.

    இதனிடையே பாட்டியின் பேரன் முகம் திருத்தி கொண்டு வருவதாக சொல்லிவிட்டு காவிரி கரைக்கு சென்றான். அங்கு முகம் திருத்தி விட்டு காவிரியில் இறங்கி குளித்தான். அப்போது திடீரென காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து பாட்டியின் பேரன் ரங்கன் இழுத்து செல்லப்பட்டான். நேரமாகியும் திரும்பாத பேரனை எண்ணி பாட்டி கவலைப்பட்டாள். ரெங்கநாத பெருமாளை தொழுது, அழுது காவிரி கரைக்கு சென்றாள். அதே வேளையில் காவிரி வெள்ளத்தில் இழுத்து சென்ற ரங்கன் ஸ்ரீரங்கத்தின் அம்மாமண்டபத்திற்கு அருகே கரை ஒதுங்கினான்.உயிர் பிழைத்த ரங்கன், ஸ்ரீரங்கத்து பெருமாளை தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்து. தன்னை காணாது பாட்டி அழுவாள் என ரெங்கநாதரிடம் முறையிட்டான்.

    காவிரியின் வெள்ளம் கண்டு அழுது புலம்பி கொண்டிருந்த பாட்டியை ஆறுதல் படுத்த நம்பெருமாள் புறப்பட்டார். பாட்டி அழுது கொண்டிருந்த ஜீயபுரத்து காவிரி கரை அருகே முகத்திருத்தம் செய்து முகத்தோடு குளித்து எழுந்த நிலையில் பாட்டியின் பேரன் உருவில் ரங்கனாக வந்தார் நம்பெருமாள். பேரனை கட்டி மகிழ்ந்து வீட்டிற்கு கூட்டி சென்றார். பசித்திருந்த பேரனுக்கு பழைய சோறும், மாவடுவும் அளித்து சாப்பிட சொன்னாள். நம்பெருமாள் சாப்பிட்டு கொண்டிருந்த அதே வேளையில் உண்மையான பேரன் ரங்கன் அங்கே வர பாட்டி திகைப்படைந்தாள். அப்போது நம்பெருமாள் சிரித்தப்படியே மறைந்தார். பக்தையை ஆறுதல் படுத்த வந்து பழைய சோறும், மாவடுவும் சாப்பிட்டார் ரெங்கநாத பெருமாள். இன்றும் அதனை நினைவூட்டும் வகையில் ஆண்டு தோறும் பங்குனி தேர் திருத்திருவிழாவில் இதை நடத்தி வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த விழா இன்று ஜீயபுரத்தில் நடக்கிறது.

    • கோவிலில் பழமையாக இருந்த பல இடங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
    • கம்பத்தடி ஆஞ்சநேயர் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளார்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தங்ககொடி மரம் பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர்கள் சிலர் திரண்டு வந்து அமர்ந்து இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கோவில் இணை ஆணையர் மாரிமுத்து அவர்களிடம் விவரங்களை கேட்டார்.

    அப்போது, அவர்கள் கம்பத்தடி ஆஞ்சநேயரை, ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் வைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கூட்டுபிரார்த்தனையில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவைப் பெற்ற கோவில் இணை ஆணையர், அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, அவர்கள் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டனர்.

    இதனால் நேற்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திருமால் அடியார்கள் குழாம் அமைப்பின் தலைவர் சீனிவாசன் கூறியதாவது:-

    கடந்த 2015-ம் ஆண்டு நடந்த மகா கும்பாபிஷேகத்தை காரணம் காட்டி கோவிலில் பழமையாக இருந்த பல இடங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கம்பத்தடி ஆஞ்சநேயர் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல் தாயார் சன்னதி உள்பட பல்வேறு இடங்களில் பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் ராமானுஜர் காலத்தில் எப்படி இருந்ததோ அதேபோல் மீண்டும் மாற்றி அமைக்க கோரி தமிழக அரசுக்கும், அறநிலையத்துறையினருக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அனுப்பி வருகிறோம்.

    இது தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீரங்கம் கோவில் நிலைமை குறித்தும், அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். அந்த வகையில் இன்று (நேற்று) ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில், கோவில் ஆரியப்படாள் வாசலுக்குள் உள்ள தங்க கொடிமரம் அருகே கூட்டு பிரார்த்தனை நடத்தினோம். இதையடுத்து எங்களை சந்தித்த கோவில் நிர்வாக அதிகாரி எங்களது கோரிக்கையை மேலிடத்துக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×